• Jul 23 2025

தாலாட்டு சீரியலை அவசர அவசரமாக முடித்ததற்கு இது தான் காரணம்- கோபமாக பதிலளித்த நடிகர் கிருஷ்ணா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சன்டிவியில் சூப்பராக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் தாலாட்டு. இந்த சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

சுமாரான ரேட்டிங் பெற்று வந்த அந்த சீரியலை திடீரென முடித்தது ஏன் என ரசிகர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர்.தாலாட்டு சீரியலில் ஹீரோவாக கிருஷ்ணா நடித்து இருந்தார். அவர் தெய்வமகள் சீரியல் மூலமாக புகழ் பெற்றவர்.


 தற்போது அவர் சன் டிவி பற்றி காட்டமாக பேட்டி அளித்து இருக்கிறார்.சீரியல் நன்றாக ஓடிட்டு இருந்த நேரத்தில் திடீரென முடிந்துவிட்டது எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் வரை நிச்சயம் சீரியல் ஓடும் என முதலில் கூறினார்கள். ஆனால் தற்போது திடீரென முடித்து இருக்கிறார்கள். 

அதற்கான காரணம் என்ன என எங்களுக்கே தெரியாது.அடுத்து பல புது சீரியல்கள் தயாராக இருப்பதாக சொன்னார்கள். அதற்காக தான் தாலாட்டு சீரியல் முடிக்கப்பட்டு இருக்கிறது என நினைக்கிறேன் என கிருஷ்ணா கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 






Advertisement

Advertisement