• Jul 23 2025

அவங்க ரெண்டு பேருடைய ரிலேஷன்ஸிப் ஸ்ரோங்காக இருக்க இது தான் காரணம்- ஓபனாக பேசிய ஷாலினியின் தங்கை ஷாமினி

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யார் என்று கேட்டால், யோசிக்காமல் முதலில் வாயில் வரும் பெயர் அஜித் - ஷாலினி தான். பிரபலங்கள் பலர் காதலித்து திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து பெற்று பிரிவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

 காதலித்தால் மட்டும் போதாது கடைசி வரை சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அஜித் - ஷாலினி ஜோடி.அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார். 


இவர்கள் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படமும் அதுதான். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

அஜித் ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது. 23 ஆண்டுகள் ஆனாலும், அன்றைப் போல் இன்றும் குறையாத காதலுடன் வாழ்ந்து வரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஷாலினியின் தங்கை ஷாமிலி பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.


அதில் அஜித் மற்றும் சாளினியின் ரிலேஷன்சிப் குறித்து பேசியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது அவங்க ரிலேஷன்ஷிப்ல நிறைய ப்ரீடம் இருக்கு. இரண்டு பேருமே தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி குடும்பமாகவும் சரி நல்ல சுதந்திரமாக வாழுறாங்க. அஜித் சேர் நடிப்பில மட்டுமல்ல பைக் ரேசிங் குக்கிங் எல்லாமே நல்லாவே பண்ணுவாரு என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement