• Jul 25 2025

என்னோட இந்த உறுப்பு பெருசாக இருக்க இது தான் காரணம்... நெகட்டிவ் கமென்சுக்கு பதில் கொடுத்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி... அவரே கூறிய ரகசிய உண்மை...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

"வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்" என்ற திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரை செய்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.


இந்த கேரக்டரை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை பெரிதும் பாராட்டி இருக்கிறார்கள். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு மிக நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

இதனை அடுத்து இவரை போல்ட் லேடி என்று அனைவரும் அழைத்தார்கள். திரைப்படங்களில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையில் இவர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியான முறையில் செய்து வருகிறார்.


சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த தவற மாட்டார். இவரது போட்டோஸ் எப்போது வரும், அதை எப்போது நாம் பார்ப்போம் என்று ஒரு ரசிகர் கூட்டம் இவருக்காக காத்திருக்கும்.


இதனை அடுத்து அண்மையில் இவர் பேட்டி ஒன்றில் தன்னுடைய மார்பகம் பெரிதாக இருப்பதைப் பற்றி பலரும் பலவிதமான கேள்விகளையும் கேலிகளையும் செய்வதாக கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இதை இவ்வாறு பெரிதாக இருப்பதற்கு காரணம் எந்தவிதமான மருந்துகளும் இல்லை இது இயற்கையாகவே நடந்து விட்டது.


அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போது சரியான உணவு கிடைக்காததால் உடல் எடை குறைந்து விட்டது. இந்நிலையில் உடலை தேற்ற வேண்டி அடிக்கடி உணவுகளை நிறைய சாப்பிட்டேன். அப்போது தான் எனக்கு ஹைபோ தைராய்டிசம் வந்துள்ளது என தெரிந்து கொண்டேன்.


இதன் காரணத்தால் அதிக அளவு எடை போட்டேன். இதனை அடுத்து தான் என் மார்பகம் பெரிதானது. இதற்காக எந்தவிதமான சிகிச்சையும் எடுக்கவில்லை என்று தற்போது ஓப்பனாக தன் மார்பகம் பெரிதான அதற்கான காரணத்தை பலர் மத்தியிலும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

Advertisement

Advertisement