• Jul 24 2025

விடுதலை பட தமிழரசியா இது.. ஆளே அடையாளம் தெரியாமால் இப்படி மாறிட்டாரே..வைரல் புகைப்படங்கள் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. கான்ஸ்டபிள் குமரேசனாக இந்த படத்தில் சூரி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் தமிழரசியாக நடித்தவர் பவானி ஸ்ரீ.

ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி வந்த பவானி ஸ்ரீ அதன் பின்பு சினிமாவில் கதாநாயகியாக நடித்தார். இவர் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷின் சகோதரி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பவானி ஸ்ரீ சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் இப்போது மாடர்ன் உடையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் ஆரம்பத்தில் மாடலாக இருந்ததனால் இதுபோன்று போட்டோ சூட் எடுப்பது அவரது நண்பர்கள் சுற்றும் வட்டாரத்தில் சாதாரணமாக பார்க்கப்படலாம்.

ஆனால் விடுதலை படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக அவரைப் பார்த்துவிட்டு இந்த புகைப்படத்தை பார்த்தால் அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் விடுதலை பட தமிழரசியா இது என ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி கிராமத்து கெட்டபை போல மாடர்ன் உடையும் இவருக்கு நன்றாக உள்ளது.மேலும் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் விடுதலை படத்தின் வெற்றியால் தற்போது பவானி ஸ்ரீ-க்கு தமிழ் சினிமாவில் நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

Advertisement

Advertisement