• Jul 26 2025

ஈரமான ரோஜாவே -2 சீரியலில் இது தான் நடக்கும்.... ‘ஜீவா’ திரவியம் பேட்டி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜா சீரியலின் இரண்டாவது சீசன் பலரையும் கவர்ந்துள்ளது.எனினும் குறிப்பாக ஜீவா & பிரியா மற்றும் பார்த்தி & காவ்யா இணை பலருக்கும் பிடித்தமான ஜோடியாகி விட்டார்கள்.

அண்மையில்தான் பார்த்தியின் அம்மா தொடர்ந்து வற்புறுத்தியதால் பார்த்தியை விட்டு விலகக் கூடிய முடிவை காவ்யா உறுதியாக எடுத்தார். எனினும் இதற்கு காரணம் காவ்யா யாரையோ பார்த்திக்கும் முன்பாகவே காதலித்ததாக பார்த்தியின் அம்மா பார்வதிக்கு தெரிய வந்தது தான்.  அத்தோடு ஒரு வழியாக பார்த்தியும் உடன்பாடு இல்லை என்றாலும் காவ்யா கேட்ட விவாகரத்தை கொடுத்து விட்டார். ஆனால் ஒருவேளை காவ்யாவிற்கு தன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாமெ ன்று ஒரு கடிதத்தையும் பார்த்தி காவ்யாவுக்கு எழுதியிருந்தார்.

இதனிடையே பார்த்திக்கு, தன்மகள் ரம்யாவை திருமணம் செய்து வைக்க தேவி சூழ்ச்சி செய்து அதை திருமணம் வரை கொண்டு வந்து விட்டார். எனினும் அப்போது பார்த்தி எழுதிய கடிதம் கிடைத்து, நேரில் வந்த காவ்யாவை தேவி ஆள் வைத்து கடத்த முயற்சித்தார்.மேலும்  அதை ஜீவா தடுத்து விட்டார். இன்னொரு புறம் தேவிக்கு எதிரான சாட்சியமாக ஜேகே, தேவியின் சூழ்ச்சிகளை அறிந்த பார்வதி அனைவராலும் திருமணம் தடுக்கப்பட்டது.


எனினும் இதனை தொடர்ந்து பார்த்தி & காவ்யா திருமணம் அரங்கேறிவிட்டது. ஆனால் ஜீவா & ப்ரியா ஜோடியை பலருக்கும் பிடித்திருந்தாலும் இன்னும் இவர்கள் இருவரும் சரிவர ஒன்றுசேரவில்லை.  இவ்வாறுஇருக்கையில் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு ஜீவா கேரக்டரில் நடிக்கும் திரவியம் பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார்.. அதில், “ப்ரியா எவ்வளவோ தன்னை மாற்றிக்கொண்டு ஜீவாவுடன் சேர்ந்து வாழ வந்துவிட்டார்.

ஆனால் அவருடன் வாழ்வது நரகம்  என ஜீவா சொல்லும்போது ப்ரியாவுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? ஏனென்றால் அவரும் பார்த்தியை திருமணம் செய்ய முடியாமல் போனதால் மனம் மாற்றிக்கொண்டு ஜீவாவை திருமணம் செய்துகொண்டவர்.


ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஒருபுறம் ஜீவா & ப்ரியா சேர்வது இன்னொருபுறம் பார்த்திக்கும் ப்ரியாவுக்கும் ஜீவா & காவ்யாவின் காதல் விவகாரம் தெரிந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்கிற தருணத்தை தான். அது விரைவில் வரவிருக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement