• Jul 25 2025

''இரவு தூங்க முன்பு இத தான் செய்வாரு..'' நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் ஓபன் டாக்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்துவந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆகியுள்ளனர்.தற்போது நயன்தாரா நடிப்பில் இறைவன், ஜவான் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

 நடிகை நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளை கடந்து தமிழின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா. நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிகளில் நடித்துவந்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் ஜவான் படத்தின்மூலம் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

 இந்நிலையில் நயன்தாரா குறித்த சுவாரஸ்யங்களை விக்னேஷ் சிவன், தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் இரவு ஒரு மணிக்குக்கூட தானும் நயன்தாராவும் இணைந்து சாப்பிடும் வழக்கம் உள்ளதாகவும் அப்படி சாப்பிட்ட பின்பு, தாங்கள் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டுத்தான் நயன்தாரா தூங்க செல்வார் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தங்களது வீட்டில் 10 வேலைக்காரர்கள் இருந்தபோதிலும், நள்ளிரவில் தூங்கும் அவர்களை நயன்தாரா எழுப்ப மாட்டார் என்றும், தானே அந்த வேலைகளை செய்துவிடுவார் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அதுகுறித்து தான் கேட்டால், இரவில் பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு வருவது வீட்டிற்கு நல்லதில்லை என்று அவர் கூறுவார் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சிறிய சிறிய வேலைகளையும் அவர் பார்த்து பார்த்து செய்வதால் தங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்..

Advertisement

Advertisement