• Jul 25 2025

என்மீது யாராவது நெக்கட்டிவ் விமர்சனங்களை வைத்தால் இதை தான் செய்வேன்- சன்னிலியோன் கொடுத்த சரியான பதிலடி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை சன்னி லியோன்.ஹிந்தி திரைப்படங்கள் மூலம் தனது திரை பயணத்தை சன்னி லியோன் ஆரம்பித்தாலும், இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும், சன்னி லியோன் கவனம் செலுத்தி வருகிறார்.

சன்னி லியோன் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'OMG' படம், டிசம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.இப்படத்தில் சதீஷ், ஜிபி முத்து, தர்ஷா குப்தா என பலரும் நடித்துள்ளனர்.


இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை வந்த அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், "உங்கள் மீது வரும் தவறான விமர்சனங்களை எவ்வாறு எடுத்து கொள்கிறீர்கள்?" என்று கேட்டுள்ளனர். பதில் அளித்த அவர், "நான் என் மீது வரும் தவறான கருத்துக்களை எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.”

”பாசிட்டிவாக நிறைய விஷயங்கள் இருக்கும் போது எதற்கு நெகட்டிவ்வான கருத்துக்ளை பார்க்க வேண்டும் . என்னை சுற்றி இருப்பவர்கள் நல்ல கருத்துக்களை மட்டும் தான் என்னிடம் கொண்டுவருவார்கள். என்னை பற்றி தெரியாதவர்கள் என் மீது தவறான கருத்தை வைக்கும் போது அதை நினைத்து ஏன் வருத்தப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement