• Jul 23 2025

இப்பிடி சொன்னதே விஜய் தான்... அஜித்-விஜய் ரசிகர்களை மீண்டும் கோர்த்து விட்ட ப்ளூ சட்டை மாறன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான 'வலிமை என்ற படத்தை விமர்சனம் செய்திருந்தார் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அதாவது அதில் இவர் நடிகர் அஜித்தின் தோற்றத்தை வைத்து பஜன்லால் சேட் என கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விடயம் அஜித் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.


இதனைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சன வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்தனர். இந்நிலையில் இந்த வாரம் துணிவு படத்தின் புதிய போஸ்டர்களும், நடிகர் அஜித் துணிவு படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என இயக்குநர் ஹெச். வினோத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டிகளும் டிரெண்டாகி வரும் நிலையில், மீண்டும் அந்த பஜன் லால் சேட் பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.


அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் பேசிய நடிகர் லொள்ளு சபா மனோகர் "வேலாயுதம் படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் தான் பஜன்லால் சேட்டு. நடிகர் விஜய் அடிக்கடி என்னை பார்க்கும் போதெல்லாம், நீங்க எங்க ஊரு பஜன் லால் சேட்டு மாதிரியே இருக்கீங்க என சொல்வார்" என பேசி உள்ளார்.

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் எடுத்துப் போட்டு ப்ளூ சட்டை மாறன் மீண்டும் அஜித் ரசிகர்களை அதனை வாயிலாக சீண்டி உள்ளார்.


இதனைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் வழக்கம் போல அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே மீண்டும் ட்விட்டர் சண்டை வெடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement