• Jul 24 2025

பரியேறும் பெருமாளாக நிஜவாழ்க்கையில் வாழ்ந்தது இவர் தான் - உண்மையை உடைத்த எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாமன்னன் படத்தின் மூலமும் சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தவர் தான் மாரி செல்வராஜ். இந்நிலையில் மாரி செல்வராஜ் முதல் படமான பரியேறும் பெருமாள் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவன் வந்துள்ளதால் எத்தகைய பிரச்சனையை சந்திக்கிறான் என்பதை கதிரின் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களுக்கு காட்டு இருந்தார். 

இப்படி எல்லாமா ஒருவரை சித்திரவதை செய்வார்கள் என்று யோசித்தால் நிஜ வாழ்க்கையிலேயே இந்த பிரச்சனையை ஒருவர் சந்தித்திருக்கிறாராம்.சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாரிமுத்து பரியேறும் பெருமாள் படத்தில் நடித்திருந்தார். 


அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியபோது, இந்த படத்தில் காதலி அழைத்ததால் கடன் வாங்கி சட்டை போட்டுக்கொண்டு கதிர் ஒரு கல்யாணத்திற்கு வருவார். அந்த காட்சியை எடுக்கும் போது மாரி செல்வராஜ் பைத்தியம் பிடித்தது போல் அங்கும் இங்கும் திரிந்தாரம்.மேலும் வந்து படப்பிடிப்பில் எல்லோரையுமே திட்டுவாராம். 

ஏன் இப்படி செய்கிறார் என்று மாரிமுத்து அவரிடம் கேட்கும் போது மாரி செல்வராஜின் சொந்த வாழ்க்கையில் இதேபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளதாம். தனது காதலியை அழைத்ததால் ஒரு திருமணத்திற்கு சென்றபோது இப்படி அவமானத்தை சந்தித்து இருக்கிறார்.


அதை நினைத்து அந்த காட்சியை எடுக்கும் போது அவரை மீறி கோபம் வந்திருக்கிறது என்று மாரிமுத்து கூறியிருந்தார். இவ்வாறு மாரி செல்வராஜ் கதையை பிரதிபலிக்கும் விதமாக பரியேறும் பெருமாள் படத்தில் கதிரின் கதாபாத்திரத்தை எடுத்து இருக்கிறார். மேலும் தொடர்ந்து அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத நிகழ்வுகளை படங்களில் கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement