• Jul 26 2025

தன் உயிரைப் பணயம் வைத்து பாலாவின் உயிரைக் காப்பாற்றிய நபர்... கல்லீரல் தானம் செய்தது இதனால் தான்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலாவுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது உடல்நிலை மோசமானது. அவர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் கூடத் தெரிவித்துவிட்டனர். ஆனால் அவ்வாறு கூறிய ரசிகர்களே வியந்து பார்க்கும் அளவிற்கு பாலா அறுவைச் சிகிச்சையின் பின்னர் மீண்டெழுந்து வந்தார். 


இதுகுறித்து பாலா சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கூறுகையில் "ஜேக்கப் ஜோசப் என்பவர் தான் எனக்கு கல்லீரல் தானம் செய்தவர். அவரை பற்றி நான் இந்த இடத்தில் பேசியே ஆக வேண்டும். கல்லீரலை தானம் செய்தால் உங்களுக்கும் பிரச்சனை தான் என ஜேக்கபிடம் டாக்டர் அந்த நேரத்தில் கூறினார். இடையே ஏதாவது நடந்தால் பிரச்சனை எனவும் டாக்டர் அவரை எச்சரித்திருக்கிறார். அதற்கு அவரோ பாலாவுக்காக நான் இந்த ரிஸ்கை எடுக்கிறேன் என டாக்டரிடம் மறுத்துக் கூறியிருக்கிறார்" என்றார்.


மேலும் "ஜேக்கப் மட்டும் அல்ல அவரின் மொத்த குடும்பமும் எனக்காக இந்தளவிற்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தது. கல்லீரல் தானம் கொடுக்கும் முடிவில் மாற்றமே இல்லை என்று ஜேக்கப், அவரின் குடும்பத்தார் டாக்டர்களிடம் தெரிவித்துவிட்டார்கள். நான் மற்றவர்களுக்கு செய்யும் தான, தர்மங்களை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அவர் தானம் கொடுப்பார் என நான் கனவில் கூட நினைக்கவில்லை. அறுவை சிகிச்சை முடிந்த பிறகே இது எல்லாம் எனக்கு தெரிய வந்தது" எனவும் அப்பேட்டியில் தனக்கு கல்லீரல் தானம் செய்தவர் குறித்து மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார் நடிகர் பாலா.

Advertisement

Advertisement