• Jul 26 2025

"இதனால தான் கால் கட்டை விரலை எடுத்துட்டாங்க.."' காமெடி நடிகர் பாவா ' லட்சுமணன் கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில், காமெடி நடிகராக நடித்துள்ளவர் தான்  'பாவா' லக்சுமணன். இவர், தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சர்க்கரை வியாதிக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். 

காலில் ஏற்பட்ட காயத்தை மருந்துகள் மூலம் சரி செய்ய, மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும், முடியாமல் போகவே, வேறு வழியின்றி அவருடைய ஒரு காலில் கட்டை விரல் மற்றும் அதற்கடுத்த இரண்டு விரல்கள் அகற்ற எடுக்கப்பட்டு விட்டது. இன்னொரு காலிலும் கட்டை விரல் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம்.


மேலும் இப்போது இவர் இருக்கும் நிலையில், இவரது மருந்து மாத்திரைகளுக்கு கூட தெரிந்த நபர்களை தவிர உதவுவதற்கு என சொந்த பந்தங்கள் யாரும் இல்லை. தனக்கு ஒரே ஒரு அக்கா மட்டுமே இருப்பதாக கூறும் 'பாவா' லட்சுமணன் அவரும் தனக்கு உதவும் நிலையில் இல்லை. ஏழ்மையில் தான் உள்ளார் என, ஒரு குழந்தை போல் பேசுகிறார்.

அதே நேரம், தனக்கு நெருக்கமான காமெடி நடிகர்கள் யாரையாவது பார்த்தால்... தன்னுடைய வேதனையை கண்ணீரோடு வெளிப்படுத்துகிறார். பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ள போதிலும் இதுவரை இவரை முன்னணி நடிகர்கள் யாரும் நேரில் வந்து சந்திக்கவில்லை என்றாலும், காமெடி நடிகர் தாடி பாலாஜி, முத்து காளை போன்ற சிலர் நேரில் வந்து நலம் விசாரித்து விட்டு செல்கிறார்கள். தங்களால் முடிந்த ஒரு தொகையையும் அவரின் உதவிக்கு கொடுத்து சென்றனர்.


இந்த நிலையில் இவரது கட்டை விரல் ஏன் எடுக்கப்பட்டது என்பது குறித்து தற்பொழுது ஓபனாக கூறியுள்ளார். அதாவது ஒரு வானில் போயிட்டு இருக்கும் போது மழை பெய்ததால் திரும்பி இருப்பதற்காக ஜெனரேட்டரில் கால் வைச்சிட்டேன். அப்போ அது தெரில பின்பு 10 நாள் கழித்த தான் கொப்பளம் கொப்பளமாக வந்து வெடிச்சு புண் ஆகிடுச்சு. வலது கால் ஆறிடுச்சு இடது கால் ஆறல. மருந்து எடுத்து பார்த்தேன் சரி வரல. பின்பு இப்படியே விட்டால் பெரிதாகிடும் என்று சொன்னாங்க. அதனால தான் மூன்று விரல எடுத்திட்டாங்க. இப்போ ட்ரீட்மென்ட் எடுத்திட்டு இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement