• Jul 24 2025

இந்த ஒரு பாதிப்பு விஜய்க்குள் இருந்திட்டே இருக்கு- பிரபல சீரியல் நடிகை பகிர்ந்த தகவல்- கேட்கவே கஷ்டமாக இருக்கே..

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் விஜய். சிறுவயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் இவர் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளார். தற்பொழுது இயக்குநர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இது ஒரு புறம் இருக்க விஜய்யின் அம்மாவின் சகோதரியான ஷீலா சீரியல்களில் நடித்து வருகின்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.


இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதுதான் விஜய் பிறந்தார். நாங்கள் எல்லாம் சேர்ந்துதான் விஜய்யை வளர்த்தோம். எந்த பிரச்சனையும் செய்யாத சமத்து பையனாக விஜய் இருப்பார். விஜய்யின் தங்கையின் மறைவு அவரை மிகவும் பாதித்தது. அப்போது அவ்வளவு மருத்துவ வசதிகள் இல்லை. அதனால், அவள் இறந்துவிட்டாள்.


அந்த சம்பவத்திற்கு பின் விஜய் சோகமாக மாறிவிட்டார். நோய்வாய்பட்டு தங்கை தனது கண் முன்னே இறந்தது அவரை மிகவும் பாதித்தது. அதன்பின் அவர் மிகவும் அமைதியாகிவிட்டார். தற்போது அவர் பிஸியாக நடித்து வருவதால் அவரை பார்க்க முடியவில்லை. ஆனாலும், அவர் இவ்வளவு பெரிய நடிகரானது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’ என ஷீலா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement