• Jul 24 2025

இந்த ரீட்மென்ட் தான் நான் குண்டாவதற்கு காரணம்- நடிகை நளினி உடைத்த உண்மை

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை வெள்ளி திரையில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதியதில்லை. அது பல வருடங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது.

 அந்த மாதிரி தான் பல வருடங்களுக்கு முன்பு வெள்ளி திரையில் ஒன்றாக நடித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் நடிகை நளினி மற்றும் ராமராஜன். நளினி பல 80,90 களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல்யமானவராக இருந்தார்.


பின் வாய்ப்புகள் குறைய நடிப்பதை நிறுத்தாமல் சின்னத்திரை பக்கம் வந்தார், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.இப்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மோதலும் காதலும் என்ற தொடரில் நடித்து வருகின்றார். இவருக்க ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார்கள்.

இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் ராமராஜனைப் பிரிந்து வாழ்கின்றார்.அண்மையில் ஒரு பேட்டியில் நளினி பேசும்போது, எனக்கு குண்டாக இருப்பது தான் ரொம்ப பிடிக்கும். நான் குண்டாக இருப்பதற்காக ஸ்டிராய்டு போட்டு கொண்டேன்.


ஐ வி எஃப்ன்னு சொல்லப்படுகிற செயற்கை கருத்தரிப்பு முறையில் தான் எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். ஐ எஃப் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் தான் இந்த ஸ்டீராய்டு ஊசியைப் போட்டுப்பாங்க.இந்த சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்கள் பலருக்குமே இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். இது என்னுடைய விஷயத்திலும் உண்மையானது என கூறியுள்ளார். 


Advertisement

Advertisement