• Jul 26 2025

மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசை இது தானாம்- கடைசியில் அதுவும் நடக்கவில்லையா?

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை ஸ்ரீவித்யா.

கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி- கிருஷ்ண மூர்த்தியின் ம களாக கடந்த 1953ம் ஆண்டு ஸ்ரீவித்யா பிறந்தார். இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருள் செல்வர் என்ற படத்தில் ஸ்ரீவித்யா அறிமுகமாகினார்.

1966ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

இவர் தமிழ், இந்தி,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்தார்.1976ம் ஆண்டு ஜார்ஸ் தாமஸ் என்பவரை திருமணம் செய்த நடிகை 1980ல் விவாகரத்து பெற்றார். பின் தனியாக வாழ்ந்து வந்த நடிகைக்கு 2003ம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலன் இன்றி 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.

ஏராளமான சொத்துக்கு சொந்தக்காரியான நடிகை ஏழை, எளிய மக்களுக்கு தனது சொத்துக்கள் போய் சேர வேண்டுமென மரண படுக்கையில் சொத்துக்கள் எழுதி அவருக்கு நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் இதில் என்ன சோகம் என்றால் அவரது கடைசி ஆசை நிறைவேறவே இல்லையாம். அவரது சொத்துக்கள் ஒரு ஏழைக்கு கூட போய் சேரவில்லை என்று கூறுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement