• Jul 25 2025

சன்டிவியின் கயல் தொடரைப் பின்தள்ளி இந்த வாரம் முதலிடத்தை பிடித்த முக்கிய சீரியல்

stella / 3 years ago

Advertisement

Listen News!

குடும்பப் பெண்களை மட்டுமல்லாது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் விதமாக ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அத்தோடு இந்த சீரியல்களின் ரி ஆர் பி விபரம் ஒவ்வொரு வாரமும் வெளியாவதும் உண்டு.

அந்த வகையில் கடந்த பல வாரங்களாக ரி ஆர் பியில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் தான் ஒளிபரப்பாகி வருவதுண்டு. இந்த நிலையில் இந்த வாரம் இந்த சீரியலைத் தட்டி விட்டு விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இடம் பிடித்துள்ளது.

இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த பாக்கியலட்சுமித் தொடரில் நீண்ட நாட்களாக தனது குடும்பத்தையும், கள்ளக் காதலியையும் ஏமாற்றி வந்த கோபியின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது.

இதனால் பாக்யா அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு விறுவிறுப்பாக ஓடுவதால் இந்த சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து
கயல்
வானத்தைப் போல
சுந்தரி
ரோஜா
கண்ணான கண்ணே
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாரதி கண்ணம்மா
எதிர்நீச்சல்
தமிழும் சரஸ்வதியும் போன்றன இடம் பிடித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

.

Advertisement

Advertisement