• Jul 25 2025

இந்த வாரத்திற்கான தலைவர் இவரா... யாருமே எதிர்பாராத வகையில் இடம்பெற்ற போட்டி. வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனானது 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் மணிகண்டன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அமுதவாணன், விக்ரமன், அசீம், ஏடிகே, ரச்சிதா, மைனா நந்தினி, ஷிவின், கதிர் என எட்டு போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


அதில் இந்த வாரத் தலைவருக்கான டாஸ்க் இடம்பெறுகின்றது. அந்த வகையில் அசீம் மற்றும் ஏடிகே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இருவரில் யார் இந்த வார கேப்டனாக இருக்க தகுதி பெற்றவர் என்பதை தேர்தெடுக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அசீம் மற்றும் ஏடிகே இருவரும் தனியாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். ஏடிகே அசீமைப் பார்த்து உங்களை விட எனக்கு கோபம் குறைவு என்று நினைக்கிறேன் எனக் கூறுகின்றார். இதனைத் தொடர்ந்து அசீம் " நீங்க இவ்வாறு கூறுவது கோபத்தின் வடிவம் என முத்திரை குத்துவது போல் இருக்கிறது" என்கின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement