• Jul 24 2025

பிகினி உடையில் கமல்ஹாசனோடு ரொமான்ஸ் பண்ணிய மூன்று நடிகைகள்- திடீரென வைரலாகும் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரைத்துறையில் இன்று நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது என்பது வெகு சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. ஆனால் 1980-களில் இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கதாநாயகிகள் இல்லாமல் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்று தனியாக நடிகைகள் இருப்பார்கள். 

அவர்கள் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடுவது பெரிய விஷயமாகப் பேசப்படும். அந்த கட்டுப்பாடான நேரத்தில் 1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'டிக் டிக் டிக்' திரைப்படத்தில் கதாநாயகிகள் ராதா, மாதவி, ஸ்வப்னா ஆகியோரை நீச்சல் உடையில் நடிக்க வைத்து அதிரடி செய்திருப்பார்.


கமல்ஹாசனை சுற்றி நிற்கும் மூன்று கதாநாயகிகளின் இந்த போட்டோ அன்றைய நாளில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் புகைப்படத்தைத் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்த ராதா நினைவுகளை எழுதியிருக்கிறார்.


 அதில், அன்றைய நாளில் எங்களுக்கு இது வேலையாகத் தெரிந்தாலும் இப்போது நினைத்துப் பார்த்தால் அது போராட்டமான காலமாகவே தெரிகிறது. எனக்குப் பிடித்த நினைவுகளில் இதுவும் ஒன்று. மாதவி எங்களைவிட இதில் உணர்வுப்பூர்வமாக இருந்ததை மறக்க முடியாது. எங்களுக்காக வாணி கணபதி இந்த அழகான ஆடைகளை வடிவமைத்திருந்தார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement

Advertisement