• Jul 25 2025

'டாப் 10 மூவீஸ்' சுரேஷ் குமாருக்கு இப்படி வளர்ந்த மகளா..தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இப்பொழுது எல்லாம் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தாலே அவர்கள் திரைப்பட விமர்சகர்களாக மாறிவிடும் நிலையில் கடந்த 90 ஆம் ஆண்டுகளில் சன் டிவியில் டாப் 10 மூவிஸ் என்ற திரைப்பட விமர்சன நிகழ்ச்சிகயை  சிறப்பாக தொகுத்து வழங்கியவர் சுரேஷ் குமார். இவர் தற்போது விமர்சனம் செய்பவர்கள் போல், படம் வெளிவந்த அடுத்த சில மணி நேரத்திலேயே விமர்சனம் செய்ய மாட்டார்.


அதாவது முதலில் புதுவரவு என்று ஒரு வாரம் அந்த படத்தை பற்றி கூறிவிட்டு அதன் பின்னர் அடுத்த வாரம் தான் அந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தெரிவிப்பார். அதுவும், ஒரு படத்தின் மைனஸை கூட நாகரிகமாக தெரிவிக்கும் வழக்கம் உடையவர் என்பதும் தற்போது போல் நட்சத்திரங்களை அநாகரீகமாக விமர்சனம் செய்ய மாட்டார் என்பதும் அவரின் சிறப்பம்சம்.


மேலும் இவரது விமர்சனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதும் 90களின் கிட்ஸ்கள் மத்தியில் இவர் பிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறுஇருக்கையில்  தற்போதும் செய்தி வாசிப்பாளராக இருக்கும் சுரேஷ் குமார் அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதும், மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ந்த நிலையில் சன் டிவி சுரேஷ்குமாருக்கு திருமணம் ஆகி கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகளும் உள்ளார். இவரது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement