• Jul 25 2025

டாப் 5 செலிபிரேஷன் டவுண்ட்- குக்வித்கோமாளியில் இந்த வாரம் நடக்க இருக்கும் சம்பவம் -வெளியாகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 4 வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. அதுவும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த வாரம் எலிமினேஷன் போட்டி நடைபெற்றது. இதில் இறுதியில் பேஸ் ஆப் குக்கிங்கில் கிரண் மற்றும் ஆண்ட்ரியன் வந்தனர்.இந்த இருவரில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக ஆண்ட்ரியன் வெளியேறினார். இவரது வெளியேற்றம் போட்டியாளர்கள், கோமாளிகளுக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே இருந்தது.

இவர் வைல்ட் காட் என்ட்ரியாக மீண்டும் உள்ளே வரவேண்டும் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இப்படியான நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் டாப் 5 போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்காக 2, மற்றும் 3 ஆகிய சீசன்களில் பங்குபற்றியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி அம்மு அபிராமி ரோஷினி ஸ்ருதி தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement