• Jul 24 2025

பாரதி கண்ணம்மா சீரியலில் ஷிவினுடன் என்ட்ரி கொடுக்கும் முக்கிய பிக்பாஸ் பிரபலங்கள்- இன்னும் யாரெல்லாம் வாறாங்க தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா.இந்த சீரியலானது தற்பொழுது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.அத்தோடு இந்த வாரம் எப்படியும் சீரியல் முடிந்து விடும் என்பதால் அதனைக் காண ரசிகர்களும் மிகவும் ஆவலாக உள்ளனர்.

 

 கடந்த சில வாரங்களாக பாரதிக்கு குடும்பத்தினரையும், கண்ணம்மா உட்பட யாரையும் அண்மையில் அடையாளம் தெரியாமல் போனது.அதன் பின்னர் மருத்துவர் பாரதியின் ஆழ்மனதில் கண்ணம்மா பெயர் ஆழமாக பதிந்திருக்கிறது, ஆனால் கண்ணம்மாவை நேரில் பார்க்கும்போது அவருக்கு யார் என்று தெரியவில்லை, எனினும் பாரதிக்கு பழைய நினைவுகள் வரவேண்டும் என்றால் கண்ணம்மா தான் உதவி செய்ய வேண்டும் மீண்டும், அவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும், கண்ணம்மா பாரதியுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். முடிந்தால் பாரதியின் பழைய நாட்களுக்கு, அதாவது கண்ணம்மாவை பாரதி காதலித்த நாட்களுக்கு சென்று பழைய காட்சிகளை மீண்டும் ரீகிரியேட் செய்தால், பாரதியின் பழைய எல்லா நினைவுகளும் அவருக்கு நினைவுக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் கண்ணம்மா அதனை செய்கின்றார்.


இதனால் பாரதிக்கு நினைவு வந்ததோடு கண்ணம்மாவும் பாரதியை மன்னித்து ஏற்றுக் கொண்டு விட்டார்.இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மீண்டும் திருமண விழா நடைபெறவுள்ளது. இந்த திருமண விழாவில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பிகபாஸ் பிரபலமான ஷிவின் மற்றும் பிக்பாஸ் சினேகன் அவருடைய மனைவி கனிகாவுடனும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.


இதனை உறுதி செய்யும் விதமாக கனிகா அந்த வீடியோவை தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்னும் எந்தெந்த செலிபிரிட்டிகள் இந்த திருமண எபிசோடில் கலந்துகொள்ளவுள்ளார்கள் என்பது எபிசோடில் தெரியவரும். இதேபோல் இத்துடன் இந்த சீரியலின் முதல் சீசன் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement