• Jul 23 2025

50 நாட்களில் பீஸ்டின் மொத்த வசூல்-வெளியானது முழு விபரம்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தளபதியின் படம் என்றாலே வசூல் சொல்ல தேவை இல்லை. அந்தவகையில் கடந்த மாதம் ஏப்ரல் 13ஆம் திகதி நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

ஆனால் பீஸ்ட் படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. விஜய் ரசிகர்களை கூட இப்படம் திருப்திப்படுத்தவில்லை என கூறப்பட்டது. ஏனென்றால் இப்படத்தில் சிறுவர்கள் கூட நம்ப முடியாத அளவுக்கு சில விஷயங்களை திணிக்கப்பட்டு இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது.

அதனால் தான் தற்போது விஜய் அக்ஷன் படங்களை படங்களை சென்டிமென்ட் படத்தில் நடித்து வருகின்றார்.எனவும் இணையத்தில் செய்தி கசிந்தது.. ஆனால் இதை எல்லாம் தவிடுபொடியாக்கி தற்போது பீஸ்ட் படத்தின் 50வது நாள் வசூல் வெளியாகியுள்ளது.

இதுவரை தமிழ் நாட்டில் மட்டும் பீஸ்ட் படம்120கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 227 கோடி வசூல் செய்து சாதனைபடைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு 2022இல் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பீஸ்ட் படம் பெற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement