• Jul 24 2025

லியோவைத் தொடர்ந்து புதிய படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாக இருக்கும் த்ரிஷா- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கதாநாயகிகளால் சினிமா துறையில் நீடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் நடிகை த்ரிஷா.

பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்த த்ரிஷா, மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் பட்டங்களை வென்றவர். தமிழ் சினிமாவில்‘லேசா லேசா’ திரைப்படத்தில் மூலம் ஒப்பந்தமானார் த்ரிஷா.


ஆனால் அதற்கு முன்னதாகவே ‘மெளனம் பேசியதே’ வெளியானது. முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர அஜித்தின் விஷா முயற்சி திரைப்படத்திலும் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது. இந்த நிலையில் த்ரிஷா the road என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷீட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement