• Jul 25 2025

'லியோ படத்தில் இருந்து திரிஷா விலகியதாக பரவும் வைரல் தகவல்... உண்மையை போட்டுடைத்த தாயார் உமா கிருஷ்ணன் !

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் லியோ படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகிவிட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில், நடிகை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் அதுகுறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க ஒப்பந்தமானார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதாவது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. 

லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழு தனி விமானம் மூலம் கடந்த வாரம் காஷ்மீருக்கு சென்றனர்.

இந்த நிலையில், காஷ்மீருக்கு சென்ற மூன்றே நாட்களில் நடிகை திரிஷா மீண்டும் சென்னை திரும்பிவிட்டதாக செய்திகள் வெளியானது. அத்தோடு அவர் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படங்களும்  வைரலாகின. இதனால் பல்வேறு விதமான தகவல்கள் பரவத் தொடங்கின. 

திரிஷாவின் காட்சிகள் படத்தில் குறைவு தான், அவருக்கான காட்சிகளை சீக்கிரமாக எடுத்து முடித்து லோகேஷ் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டதாகவும், கிட்டத்தட்ட பிரியா ஆனந்த் தான் ஹீரோயின் என்று ஒரு தகவல் பரவியது.

சிலர் காஷ்மீர் ஷூட்டிங்கின் போது இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் திரிஷாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக திரிஷா லியோ படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் தகவலை பரப்பினர். லேட்டஸ்ட்டாக பரவிய தகவல் என்னவென்றால், காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாகவும், அங்கு குளிர் தாங்க முடியாமல் தான் நடிகை திரிஷா சென்னைக்கு திரும்பியதாகவும் சொல்லப்பட்டது.

இப்படி திரிஷாவை பற்றி பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரவி வந்த நிலையில், உண்மை நிலவரத்தை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன்கூறியுள்ளார் . 

அதாவது சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திரிஷா தற்போது காஷ்மீரில் தான் உள்ளார். அவர் சென்னை வந்துவிட்டதாக பரவும் தகவல் துளியும் உண்மையில்லை. அதுபற்றி பரவும் தகவல் அனைத்து வதந்தி என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் திரிஷா லியோ படத்தில் இருந்து விலகவில்லை என்பது உறுதியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement