• Jul 24 2025

லோகேஷின் பிறந்தநாளில் த்ரிஷா வெளியிட்ட ஷுட்டிங் போட்டோ-அதுவும் யார் கூட நிற்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் யங் பிளடி ஸ்வீட் இயக்குநராக பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 37வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் எப்படியாவது தனது சினிமா கனவை நனவாக்க வேண்டும் என போராடும் போது, நான் வேலைக்குப் போறேன் நீங்க சினிமா வாய்ப்பை தேடுங்க என தக்க நேரத்தில் அவரது மனைவி கொடுத்த ஊக்கம் தான்  தற்பொழுது மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் போன்ற வெற்றிப்படங்களை இயக்குவதற்கு வழிசமைத்தது.


அந்த வகையில் லோகேஷ் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது. இதனால் படக்குழுவினர் லோகேஷுடன் நிற்கும் பிரபலங்கள் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.


அதனடிப்படையில் தற்பொழுது த்ரிஷாவும் லோகேஷ் மற்றும் சஞ்சய் தத்துடன் நிற்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்தப்புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement