• Jul 25 2025

பிருந்தா என்னும் வெப் சீரியலில் களமிறங்கிய த்ரிஷா- அவரே கொடுத்த புதிய அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து நடித்து வரும் நடிகை தான் த்ரிஷா. இவர் இறுதியாக மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த கதாப்பாத்திரத்தில் த்ரிஷா தனது நடிப்பை பிரமாதமாக வெளிபடுத்தினார் என்றும் விமர்சனங்கள் வந்தது.பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு த்ரிஷாவிற்கு படவாய்ப்புகள் அதிகம் கிடைத்து வருகின்றன.  இதனால் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் புதிதாக நடிப்பதற்கு கதைகள் கேட்டு வந்தார் த்ரிஷா. இதில் வெப் சீரிஸ் ஒன்றின் கதை த்ரிஷாவுக்கு ரொம்ப பிடித்துவிடவே, அதன் பணிகள் தொடங்கப்பட்டன. தெலுங்கில் தயாராகும் இந்த வெப் சீரிஸை சூர்யா வங்கலா இயக்கியுள்ளார்.

'பிருந்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த அக்டோபர் 16 முதல் தொடங்கப்பட்டது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சீரிஸ் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. படக்குழு அதுகுறித்த தகவலை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement