• Jul 24 2025

விமர்சனங்கள் கட்டுக்கடங்காத திரிஷாவின் ராங்கி.. வெளியான ட்விட்டர் விமர்சனம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகையாக வலம் வருபம் நடிகை திரிஷா. இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் ராங்கி. குந்தவையாக ரசிகர்களை கவர்ந்த திரிஷா இந்த படத்தில் வேறு விதமான பரிணாமத்தில் நடித்துள்ளார். எம் சரவணன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் திருஷா நடிப்பில் ராங்கி படம் வெளியாகி உள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைய அம்சத்துடன் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அத்தோடு அந்த வகையில் ராங்கி படத்தில் திரிஷா ஜானலிஸ்ட் ஆக நடித்துள்ளார். அநியாயத்திற்கு குரல் கொடுக்கும் ஒரு துணிச்சலான கதாபாத்திரம் அவருடையது. எனினும் இப்போது ராங்கி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

மேலும் ராங்கி படம் தமிழ்நாட்டில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படம் 2 மணி நேரம் ஒரு நிமிடம் கொண்டுள்ளது. தமிழ் படத்தைப் பார்த்த ரசிகர்கள் முதல் பாதி நன்றாக இருந்ததாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அத்தோடு இப் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் சண்டை காட்சிகள் அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் டிக்கெட்டுக்கு கொடுத்த காசுக்கு தரமான படம் என்றும் திரிஷா மற்றும் அலீம் கதாபாத்திரங்கள் நன்றாக இருந்ததாக கூறியுள்ளனர்.அத்தோடு  இந்த படத்தின் மூலம் த்ரிஷாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்க உள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித்தின் ஏகே 62 படம் ஆகியவற்றில் திரிஷா நடிக்க உள்ளார். இப்போது அவர் நடிப்பில் வெளியான ராங்கி படமும் பட்டையை கிளப்பி வருவதால் மீண்டும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இதோ ட்விட்டர் விமர்சனம்....







Advertisement

Advertisement