• Jul 25 2025

அடிக்க பாய்ந்த மணிகண்டன்.!..கதறி அழுத மகேஷ்வரி...வெளியான ப்ரமோ...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வீட்டில் ஆறு பேர் மட்டுமே இருப்பதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை அழைத்து  தங்க வைத்திருக்கிறார்கள். 

மேலும் அப்படி விருந்தாளியாக வந்திருக்கும் மணிகண்டனும், விஜே மகேஸ்வரியும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயம் இன்று வெளியான முதலாவது ப்ரமோவில் வந்தது.அந்த ப்ரோமோவில் முட்டையை ஒளித்து வைத்த அசீம் மற்றும் அமுதவாணனின் குட்டு வெளிப்பட்டது. இதனால் சண்டை பெரிதாக வெடித்துள்ளது. மகேஸ்வரி மற்றும் மணிக்கு இடையே சண்டை கிளம்பியுள்ளது. நீ ஒன்னும் கிழிக்கவில்லை என்றுதான் மக்கள் உன்னை பாதியிலேயே வெளியேற்றினார்கள், இப்ப வந்து சீன் போடாதே என்று மகேஸ்வரியை மணி திட்டி தீர்க்கிறார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் மகேஷ்வரி தான் பேசிய விடயத்தை பற்றி விளக்கம் கொடுக்க இடையில் அசீமும் தன்னுடைய கருத்தை முன்வைக்க பிரச்சனை இன்னமும் வெடிக்க ஆரம்பித்தது.

பின் மணிகன்டன் திரும்பவும் மகேஷ்வரியிடம் வாக்குவாதம் ஏற்பட்டது.இதன் பிறகு விக்ரமன் ராம் மற்றும் ஷவின் எல்லோரும் மகேஷ்வரியிடம் நடந்தது பற்றி கேட்க மகேஷ்வரி கண்கலங்கி கதறி அழுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement