• Jul 24 2025

25 லட்ச ரூபாய் கடன் வாங்கும் TTF வாசன்.. அவரே கூறிய காரணம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஒருவர் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமாயின் அதற்குப் பல வழிகள் உண்டு. அந்தவகையில் சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரபலங்கள் பலரும் தற்போது வளர்ந்து வருகின்றனர். இவ்வாறாக யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பாலோவர்களை வைத்திருப்பவர்களில் TTF வாசனும் ஒருவர். 

அதாவது இவர் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு யூடியூப்பில் பல இலட்ச ரூபாய்களை சம்பாதித்து வருகிறார். குறிப்பாக இவரை அதிகம் பின் தொடர்வது என்றால் அது 2கே கிட்ஸ் தான். அவர்களை கவரும் விதமாக பைக்கில் அதிவேகமாக செல்வது மற்றும் சாகசம் செய்வது என தொடர்ந்து சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 

இவரின் இந்த வீடியோக்கள் இளைஞர்களை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் உள்ளதால் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்களும் நாளுக்கு நாள் எழுந்த வண்ணம் உள்ளன.

இருப்பினும் இவ்வாறான எதிர்ப்புக்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார் TTF வாசன்.ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன்,  சில வழக்குகளில் சிக்கி இருந்தார். இருப்பினும் தற்போது பைக்குகளில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

எனினும் சமீபத்தில் வாசன், தனது முதுகில்  ரசிகர்களின் முகங்களை பச்சைக்குத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின.

இவ்வாறுஇருக்கையில் வாசன் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், TTF பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கி ஷாப் வைக்க 20 முதல் 25 லட்ச ரூபாய் கடன் கேட்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் 10 லட்சம் ரூபாய் பணத்தை அந்த கடைக்கு உள்ளக அலங்கார வேலைகளுக்கு செலவிட்டு உள்ளதாகவும் வாசன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement