• Jul 25 2025

லியோ படத்திற்கு U/A சான்றிதழ்? அறிவிப்பை வெளியிட்டது படக்குழு !

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.



அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான,  படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. இந்நிலையில் நாளைய தினம்  இப்படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதால் ரசிகர்களிடத்தே  எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கின்றது.



இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கு U/A  சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கின்றது.

Advertisement

Advertisement