• Jul 25 2025

இரண்டு நாட்களில் உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் செய்துள்ள வசூல் விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் 'கலகத் தலைவன்'. 

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உட்படப் பல திரைப்பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

 ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படமானது நேர்த்தியான திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தின் கதாநாயகனான உதயநிதியின் தோற்றம் மற்றும் அவரது நடிப்பை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி உள்ளனர். அத்தோடு இதில் வில்லனாக ஆரவ் நடித்துள்ளார்

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 4 கோடி வரை வசூல் செய்துள்ளது. 



Advertisement

Advertisement