• Jul 25 2025

அசிங்கமாக கேப்பேன்...பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த சண்டை..பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. கடந்த செப்டம்பர் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறியிருந்தனர். இந்த நிலையில் இவர்களை அடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது

இவ்வாறு விறுவிறுப்பின் உச்சத்தில் இருக்கும் இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் நரகத்தில் இருந்து சொர்க்கத்திற்கு ஒரு ஆளும் சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்கு ஒரு ஆளும் அழைக்க வேண்டும் என்றால் என்ன காரணம் கூறி அழைப்பீர்கள் என்று கேட்டதும்  போட்டியாளர்கள் அதற்கு பதிலளிக்கின்றார்கள்.

அதாவது கதிரவன் நரகத்தில் இருந்து சொர்க்கத்திற்கும் ADK சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடும் போது ADK விற்கு கோவம் வந்து கத்த ஆரம்பித்து விடுகின்றார்.அதாவது யாரும் சிரிக்காதீங்க...அசிங்கமாக கேப்பேன்...எனக் கூறியதும் கோபம் வந்த அசீம் ...அசிங்கமாக கேப்பேன் என்றால் என்ன அர்த்தம் சொல்லுங்க என  இருவரும் சண்டை இடுகின்றனர்.இதற்கு ADK ...நீங்க சீன் கிரியேட் பண்ணாம  அடங்குங்க..எனக் கூறி மாறி மாறி சண்டை பிடித்துக்கொள்கிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ..




Advertisement

Advertisement