• Jul 23 2025

இயக்குநர்.எச் வினோத்துடன் கூட்டணி அமைக்கும் கமல்ஹாசன்- கமல் 233 படம் குறித்து வெளியாகிய அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் எச். வினோத்.இப்படத்தினைத் தொடர்ந்து  தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை வலிமை மற்றும் துணிவு என்று பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார்.

தன்னுடைய திரைப்படத்திற்காக அதிக முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இவரும் ஒருவர். அமைதியான சுபாவமும், நேர்த்தியான கதை அமைப்பும் இவரை ஒரு சிறந்த இயக்குநராக உருவாக்கி உள்ளது என்றால் அது மிகையல்ல. தற்பொழுது உலக நாயகன் கமல்ஹாசனின் 233வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் K திரைப்படத்தின் பணிகளை முடித்த பிறகு, கமல் தனது 233வைத்து பட பணியில் இணைவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவலின் படி இந்த Kamal 233 படத்தின் தலைப்பில் RISE TO RULE என்ற வாசகம் அடங்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. 

இந்த படம் அரசியல் சார்ந்த ஒரு படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் கமல்ஹாசன் தமிழில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement