• Jul 27 2025

சூர்யாவின் ‘வாடிவாசல்’ குறித்து வெளியாக இருக்கும் அப்டேட்!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் இப்போது பாலா இயக்கும் படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் படம் ஆகியவற்றில் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிமாறனும் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் ‘வாடிவாசல்’ திரைப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிடவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அதில் ’தேசிய விருது வென்ற @Suriya_offl அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக #வாடிவாசல் படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் அவர் பயிற்சி பெற்றபோது எடுத்த காட்சிகள் வெளியிடுவதில் மகிழ்ச்சி’ எனக் தெரிவித்துள்ளார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement