• Jul 24 2025

உடைகள் அணிவதில் எல்லை மீறும் உர்பி ஜாவேத்; அவரை பாராட்டவும் ஒரு குறூப் இருக்கு!

ammu / 2 years ago

Advertisement

Listen News!

இளம் நடிகை உர்பி ஜாவேத் என்ற பிரபல பாலிவுட் நடிகை இணைய பக்கங்களில் தன்னுடைய நடனம் மற்றும் அறிவுத்திறமையை வெளிப்படுத்தி சினிமா வாய்ப்பை பெற்றவர். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட வித்தியாசமான உடைகளை அணிந்து பொது வழியில் தோன்றி பிரபலமானது தான் அதிகம்.


பொதுவாக சினிமா நடிகைகள் ஒரு மாதிரியான மாடலான உடைகளை அணிவது வழக்கம். ஆனால் இவர் அதெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று விதவிதமான உடைகளை அணிவது வழக்கம்.


கார் தைக்கக்கூடிய லெதரில் கார் சீட் போலவே உடை அணிவது, ஹேண்ட் பேக் போல உடையை வடிவமைத்து அதனை மாட்டிக் கொள்வது என இப்படி வித்தியாசமான உடைகளை அணிவார் சமீபத்தில் பீட்சா போன்ற வடிவத்தில் ஆடையை தைத்து அதனை மாட்டிக் கொண்டு வந்திருந்தார்.


அதன் பிறகு பிராவுக்கு பதிலாக இரண்டு பக்கமும் ஆரஞ்சு பழம் இருப்பது போன்ற ஒரு உள்ளாடையை மாட்டிக்கொண்டு தோன்றியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.


இந்நிலையில் கீழே ஒரு பேண்ட் மேலே மேலாடைக்கு பதிலாக இன்னொரு பேண்ட் என்று வித்தியாசமான ஒரு உடையில் தோன்றியிருக்கிறார் இவர். இதனை பார்த்து ரசிகர்கள் அடடே என்ன ஒரு விசித்திரமான டிரஸ் என்று கூறி வருகின்றார்கள். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


இணைய பக்கங்களில் அதிக அளவில் ரசிகர்களை பெற்றிருக்கும் உர்ஃபி ஜாவாத் தன்னுடைய வித்தியாசமான உடைகள் மூலமே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கிண்டல் செய்கின்ற ஒரு கூட்டம் இருந்தாலும் இவரின் வித்தியாசமான ஜோசனையை பாராட்டி வரும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.


Advertisement

Advertisement