• Jul 24 2025

ப்ப்ப்பா..என்னழகு ...! மஞ்சள் காட்டு மைனாவாக மாறி அழகில் ஜொலிக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

கடந்த 2017ம் ஆண்டு மேயாத மான் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின்பு, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா: அத்தியாயம் போன்ற உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். மேலும், கடந்த மாதம் உலகமெங்கும் வெளியான சிலம்பரசனின் பத்து தல படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

கமலஹாசனின் இந்தியன் 2, ராகவா லாரன்ஸின் ருத்ரன் போன்ற படங்களில் டாப் நடிகர்களுடன் இவர் இணைந்துள்ளார். இந்த திரைப்படம் சித்திரை புதுவருடப்பிறப்பான இன்று உலகமெங்கும் வெளியாகி திரையரங்குளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை பவானி சங்கர் மஞ்சள் நிற சேலையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement