• Jul 24 2025

வடிவேலு, ஈரோடு மகேஷ், சாண்டி போலி டாட்கர் பட்டம் விவகாரம் – அண்ணா பல்கலைகழகம் திடீர் விளக்கம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாடகர் தேவாவிற்கும், நடிகை வடிவேலுவிற்கும் போலி டாக்டர் பட்டம் வழங்கியிருக்கும் தகவல் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே திரை துரையில் இருப்பவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் சமீபத்தில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் என்ற அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பசினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள். பின் இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் தேவா மற்றும் நடிகர்கள் கஜராஜ், ஈரோடு மகேஷ், நடன இயக்குனர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் போன்ற பலருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருந்தது. இவர்களுடன் நடிகர் வடிவேலுக்கும் டாக்டர் பட்டத்தை கொடுத்தார்கள். ஆனால், இந்த பட்டத்தை நடிகர் வடிவேலு வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொண்டிருந்தார்.

மேலும், இந்த பட்டங்களை எல்லாம் ஓய்வு பெற்ற நீதிமன்ற நீதிபதி வள்ளி நாயகத்தை வைத்து வழங்கியிருந்தார்கள். இந்த நிலையில் வடிவேலுக்கு கிடைத்த கௌரவ டாக்டர் பட்டம் போலியான பட்டம் என்று அதிர்ச்சி தகவல் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது, நிகழ்ச்சி நடத்திய சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் என்ற ஒரு அமைப்பே இல்லையாம்.

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்வுக்கான அமைப்புகளில் இந்திய அரசின் முத்திரையும், அண்ணா பல்கலைக்கழக பெயரும் அச்சிடப்பட்டிருக்கிறது. இது சட்டவிரோதமான செயல் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்வுக்காக சிறப்பு விருந்தினராக தான் நீதிபதி அழைக்கப்பட்டார் என்று நீதிபதி தரப்பில் சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்வுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

அத்தோடு , இந்த விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் வேல்ராஜ் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பொதுவாகவே இந்த மாதிரியான விருது வழங்கும் விழாக்களை தனியார் அமைப்புகள் ஹோட்டல்களில் நடத்துவது தான் வழக்கம். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது கண்டிக்கத்தக்க ஒன்று. நீதிபதி வள்ளி நாயகத்திடம் இந்த நிகழ்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது என்றும், நீதிபதி பங்கு பெற இருக்கிறார் என்றும் எங்களிடம் அவர்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.


ஆனால், அதை எல்லாம் செய்யவில்லை. இதற்காக நாங்கள் வருந்துகிறோம். இது தொடர்பாக நாங்கள் போலீஸ் இடம் புகார் அளித்திருக்கிறோம். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இப்படி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Advertisement