• Jul 24 2025

"சந்திரமுகி சண்டைல என் மண்டைய ஏன்.....' பயத்தில் நடுங்கும் வடிவேலு... லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ....

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

லைகா நிறுவனம் டப்பிங்கின் போது சந்திரமுகியின் குரலைக் கேட்டதும் வடிவேலு பயத்தில் நடுங்கிய சூப்பரான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே வடிவேலு சந்திரமுகி தன்னுடைய பெஸ்ட் ப்ரண்ட் என கூறும் வீடியோ வைரலாகி இருந்தது. தற்போது வெளியாகிய காமெடி நடிகர் வடிவேலுவின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.  


நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகிய சந்திரமுகி 2 திரைப்படத்துக்கு தற்போது நல்ல வரவேற்பு   கிடைத்து வருகிறது. சந்திரமுகி பாகம் ஒன்றைப் போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெறுமா என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் தற்போது லைகா நிறுவனம் டப்பிங்கின் போது சந்திரமுகியின் குரலைக் கேட்டதும் வடிவேலு பயத்தில் நடுங்கிய சூப்பரான வீடியோ ஒன்றினை வெளிட்டுள்ளது. இதில் வடிவேலு " நாலு பேய் பிசாசோட பழகி பிரண்டாகி ட்ரெண்டாகி இருப்பன் "என கூறுகின்றார். பின்னர் மறுபுறம் சந்திரமுகியின் மிரட்டலான குரலைக் கேட்டதும் பயத்தில் நடுங்குகின்றார். இதோ அந்த அசத்தலான வீடியோ...!   


Advertisement

Advertisement