• Jul 24 2025

மீண்டும் களத்தில் இறங்கியாச்சு- கச்சா பாதாம் ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய வடிவேலு! செம்ம வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் கார்த்திக் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  தயாரிக்கும் இப்படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் கதாநாயகனாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதோடு ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு சிவாங்கி ஷிவின் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி கைப்பற்றியுள்ளது.சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

நாய்களை கடத்தும் நாய் சேகர் கதாபாத்திரத்தில் வடிவேலு இந்த படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் நடிகர் வடிவேலு, வட இந்தியாவில் பிரபலமான கச்சா பாதாம் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கு வடிவேலுவின் நடனம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement