• Jul 24 2025

கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வடிவேலு- ஜாலியாக செல்பி எடுத்த மக்கள்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் இருந்து தற்பொழுது வரை காமெடியில் கிங் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் தான் வைகை புயல் வடிவேலு. இவருடைய காமெடியை பார்த்து ரசிக்காதவர்களே இல்லை எனலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது காமெடியால் ஈர்த்து வைத்துள்ளார்.

நீண்ட காலம் நடிப்பிலிருந்து விலகியிருந்தாலும் இவர் நடித்த படங்களில் இருந்து பல காமெடிகள் மீம்ஸ்களாக கிரியேட் ஆகி இருக்கின்றன. இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

தற்போது “நாய்சேகர் ரிட்டன்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.அதை தொடர்ந்து “மாமன்னன்” உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மைசூரில் படப்பிடிப்பில் இருந்த வடிவேலு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

வடிவேலு வருவதை கண்டதும் ஆச்சரியமடைந்த மக்கள் அவரை சூழ்ந்து கொண்டுள்ளனர். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வடிவேலு, ரசிகர்களின் செல்பிகளுக்கு பொறுமையாக போஸ் கொடுத்திருந்துவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement