• Jul 24 2025

சந்திரமுகி 2 படப்பிடிப்புத்தளத்தில் வடிவேலுவால் ஏற்பட்ட புதிய பிரச்சினை- லெஃப்ட் ஹேண்டிலை காட்டிய இயக்குநர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது  இயக்குநர் பி. வாசு தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் நகைச்சுவை நடிகராக இணைந்துள்ளார்.

மேலும்  வடிவேலு தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.ஏற்கனவே நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை முடிப்பதற்காக சந்திரமுகி 2 ஷூட்டிங்கை தாமதப்படுத்தினார் வடிவேலு என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் ஒரு முறை அப்படி சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து உடனடியாக வேறு ஒரு இடத்துக்கு கிளம்பிப் போகப் போறேன் என அடம்பிடித்து இருக்கிறாராம் வடிவேலு.


இந்த சீனை முடித்து விட்டு வேறு எங்காவது போங்க என இயக்குநர் பி. வாசு கேட்டுக் கொண்ட நிலையிலும், வடிவேலு கேட்காமல் அடம்பிடித்த நிலையில், இயக்குநர் பி. வாசு ரொம்பவே டென்ஷனாகி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. மேலும், அப்போது வடிவேலுவை வெளியே அனுப்ப பி. வாசு செய்த விஷயம் தான் கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாக கூறுகின்றனர்.


இயக்குநர் பி. வாசுவின் பேச்சையும் கேட்காமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியே போக அடம்பிடித்த வடிவேலுவை பார்த்து லெஃப்ட் ஹேண்டிலையே போங்க என பி. வாசு அனுப்பியது வடிவேலுவையே மனதளவில் பாதித்ததாகவும் பல இடங்களில் இதனை அவர் சொல்லி வருத்தப்பட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் தீயாய் பரவி வருகின்றன. அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும் வடிவேலுவுக்கு வேண்டாதவர்கள் இப்படி கிளப்பி விடுவதாகவும் சில பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன என்பதும் குறிப்படத்தக்கது.


Advertisement

Advertisement