• Jul 24 2025

விவாகரத்து பெற்ற பின்னர் தான் நிம்மதியாக இருக்கிறேன்- இது மட்டும் தான் என்னோட ஆசை-வருத்தத்துடன் பேசிய வைக்கம் விஜயலட்சுமி

stella / 2 years ago

Advertisement

Listen News!

ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான குக்கூ படத்தில் இடம்பெறும் 'கோடையில மழை போல' என்கிற பாடலை பாடி தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுமானவர் தான் வைக்கம் விஜயலட்சுமி. இதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலமானார்.

வைக்கம் விஜயலட்சுமிக்கு பல படங்களில் பாட வாய்ப்பு கொடுத்தது இசையமைப்பாளர் டி இமான் இவர். கௌதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ படத்தில் புதிய உலகை தேடி போகிறேன் என்ற பாடலை பாடி பிரபலமானார். அதன் மீண்டும் டி இமான் இசையில் இவர் பாடிய 'சொப்பன சுந்தரி நான் தானே' என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது.


பின்னர் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி வரும் இவர் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான இருப்பதால்  திருமண வாழ்க்கை சரியில்லாமல் அமைந்துவிட்டதால் பல பிரச்சினைகளையும் எதிர் கொண்டு வந்தார்.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஜயட்சுமி, ரசிகர்கள் என்னிடம் வந்து போட்டோ எடுத்துக்கொள்ளும் போதும், என்னை புகழ்ந்து பேசும் போதும் மனதிற்குள் ரொம்ப சந்தோஷமா இருக்கு, நமக்கு கூட ரசிகையா என்று நினைப்பேன். அதே போல எனக்கு பிடித்த பாடல் சொப்பன சுந்தரி தான் என்றார்.


மேலும் திருமண வாழ்க்கை குறித்து பேசிய வைக்கம் விஜயலட்சுமி, விவாகரத்திற்கு பிறகுதான் நிம்மதியா சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு பார்வை வந்தால் முதலில் என் அம்மா, அப்பா, அந்த கடவுளைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதே போல பூவு, மாலை, புடவை என சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆசை என வருத்தத்துடன் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement