• Jul 25 2025

வைரமுத்து என்ன தெருவிலயா இருக்கார்..? மூணு வீடு போதாதா..? அவருக்கு எதுக்கு கனவு இல்லம்..? தமிழக அரசை சரமாரியாக விளாசும் பிரபலம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திறமையான கலைஞர்கள் எப்போதுமே ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு பல நிறுவனங்களும் பல விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றது. அந்தவகையில் தமிழ் மொழியின் உடைய வளர்ச்சி மற்றும் இலக்கிய பங்களிப்புக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற விருதுகள் பெற்றவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 'கனவு இல்லம்' என்ற திட்டத்தின் கீழ் அந்த கலைஞர்கள் விரும்பும் இடத்தில் வீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஆகிய மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


இந்தத் திட்டத்தின் கீழ் எழுத்தாளர்கள் பலருக்கு கடந்தாண்டு அவர்களின் விருப்பத்தின் பேரில் வீடுகள் வழங்கப்பட்டன.அந்த வரிசையில் தற்போது கவிஞர் வைரமுத்துவுக்கும் வழங்கப்பட உள்ளது. அதாவது கள்ளிக்காட்டு இதிகாசத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக இந்தக் கனவு இல்லம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். அந்தவகையில் அவர் தனது ட்விட்டரில் "வைரமுத்து வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு? 2006ல சம்பாரிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல. பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு ரூ.5 லட்சம் வாங்குன பெரிய மனுசன். அந்த படமே அரசு மானியத்துல எடுத்தது. இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா?" என பதிவொன்றின் வாயிலாக தமிழக அரசை விளாசி உள்ளார்.


மேலும் அவர் "கவிஞருக்கு இந்த மூணு வீடு போதாதா? கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்களுக்கு?  யார் அப்பா வீட்டு பணம்?" சாரமாரியாக கேட்டிருக்கின்றார்.


இவரின் இந்தப் பதிவு வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement