• Jul 24 2025

ரிலேஷன்ஷிப்பில் இருப்பது குறித்து வெளிப்படையாகப் பேசிய வாணி போஜன்- அடப்பாவமே.... இப்பிடி சொல்லிட்டாங்களே

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து, திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் ஒரு சிலரே. அந்த லிஸ்டில், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானிக்கு பிறகு இடம்பிடித்தவர் தான் நடிகை வாணி போஜன். 

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள், மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமான இவர், ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தான் பேமஸ் ஆனார். 


இதனை அடுத்து பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி வருகிறார்.இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் லிவிங் ரிலேஷன்ஷிப் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் இருக்கும் வரை என்னை யாரும் அப்படி பேசவில்லை.


ஒரு படத்தில் ஹீரோவோட நடித்துவிட்டால் அவர்களுடன் இணைத்து தவறாக எழுதி வைத்துவிடுவார்கள்.ஏன் இந்த மாதிரி எல்லாம் போடுறாங்க, வியூஸ் வேண்டும் எண்ணத்தில் ஏதாவது பொய்யான தகவலை பரப்புகிறார்கள் என்று வாணி போஜன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement