• Jul 25 2025

40 வருடங்கள் கழித்து வனிதாவிற்கு தெரிய வந்த உண்மை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியாகிய சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.

இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனது திருமண வாழ்வில் அடிக்கடி பிரச்சினைகளை சந்தித்து வந்தார்.

இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார் வனிதா.


வனிதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் பல சர்ச்சைகளில் முன்பு சிக்கி இருக்கிறார். அப்பா விஜயகுமார் உடன் சண்டை அதனால் மொத்த குடும்பத்தை விட்டு வனிதா விலகி தான் இருக்கிறார்.

எனினும் அதே நேரத்தில் வனிதா அவ்வப்போது இறந்த தனது அம்மா பற்றி அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில்  பிரபல நடிகை விமலா ராமன் அம்மா வழியில் உறவினர் என்பது தற்போது 40 வருடங்கள் கழித்து தெரிந்திருக்கிறது என வனிதா கூறி இருக்கிறார்.

பிரிட்டிஷ்காரர்களால் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி சர் சிடி முத்துசாமி ஐயரின் கொள்ளுப் பேத்தி தான் விமலா ராமன். அவரது சிலை நீதிமன்ற வளாகத்தில் தற்போதும் இருக்கிறது என வனிதா கூறி இருக்கிறார்.  




Advertisement

Advertisement