• Jul 25 2025

வனிதாவுக்கு இப்படியொரு நோயா....? நெருக்கமானவர்களுக்கு மட்டுமே உண்மை தெரியுமாம்..கசிந்த தகவல்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 நடிகை வனிதா , விஜயகுமார் மற்றும் மஞ்சுளா  ஆகியோரின் மகளாக இருந்தபோதிலும் தன்னுடைய வீட்டில் இருந்து தனித்து விடப்பட்டுள்ளார். தன்னுடைய மனதிற்கு பிடித்ததை போல்டாக செய்யக்கூடியவர். மனிதிற்கு தோன்றியதை போல்டாக பேசக்கூடியவர் என்று இவர்மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இதுவரை மூன்று முறை திருமணம் செய்துள்ள வனிதா விஜயகுமார், விவாகரத்தும் பெற்றுள்ளார். எனினும் தற்போது தன்னுடை மகள்களுடன் தனித்து வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் இவரது மூன்றாவது கணவர் பீட்டர் பால், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அதற்காக வருத்தம் தெரிவித்தருந்தார் வனிதா விஜயகுமார். அத்தோடு மூன்றாவது கணவரை பிரிந்தவுடன், சினிமா, பிசினஸ் என பிசியாக காணப்படுகிறார். அத்தோடு தன்னுடைய மகள்களுடன் இணைந்து வாழ்ந்துவரும் வனிதா, தொடர்ந்து யூடியூப் சேனலில் அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்.


விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிமூலம் மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வனிதா விஜய்குமாருக்கு, இந்த ரீ என்ட்ரி மிகவும் சிறப்பாகவே அமைந்தது.அத்தோடு  சக போட்டியாளர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் இறங்கிய அவர், நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார். ரசிகர்களின் வசைகளை தொடர்ந்து வாங்கிக் கட்டிக் கொண்டார். இதையடுத்து இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான பட வாய்ப்புகள் இவருக்கு அமைந்தன.

இந்நிலையில் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார் வனிதா விஜயகுமார். தனது சமீபத்திய பேட்டியில், தனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்தோடு இது தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறியுள்ளார். சின்ன இடங்களில் தன்னால் இருக்க முடியாது என்றும் லிப்ட், கழிவறை போன்ற இடங்களிலும் அதிக நேரத்தை தன்னால் செலவழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

கேரவனில் இருக்கும் கழிவறையைகூட தான் பயன்படுத்த மாட்டேன் என்றும், உடை மாற்றிவிட்டு உடனடியாக வெளியில் வந்துவிடுவேன் என்றும் வனிதா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்றபோதும், இந்த பாதிப்பால் தான் அவதிப்பட்டதாகவும் வனிதா விஜய்குமார் தெரிவித்துள்ளார். தன்னால் எந்த இடத்திலும் அடைபட்டு இருக்க முடியாது என்றும் அவர் தன்னுடைய பாதிப்பு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.


Advertisement

Advertisement