• Jul 26 2025

அவனை எல்லோரும் சேர்ந்து அட்ராஃக் பண்றாங்க- அசீமுக்கு ஆதரவாக குரல் கொடுத்த வனிதா விஜயகுமார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் நிவா வெளியேறிய நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளே சண்டை கோழியாக மாறி, பிரச்சனைகளுக்கு வரிந்து கட்டி நிற்கிறார் தனலட்சுமி.அந்த வகையில் முதல் புரோமோவில், இந்த வார தலைவருக்கான டாக்கில் வெற்றி பெற்ற மைனாவை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என, அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். 

பின்னர் இவரை சக போட்டியாளர்கள் தேற்றிய போது, தங்களின் தரப்பு நியாயத்தை கூற வந்த ரக்ஷிதாவிடம் தயவு செஞ்சு போறீங்களா என கூறி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். அதே போல பேச வந்த ஷிவினைப் பார்த்தும் என்கிட்ட பேசாதே என அதட்டினார்.


எனவே இந்த வாரம் தனலக்ஷ்மியால் பெரிய சண்டை பரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படி ஒரு நிலையில் கேடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் அசீம் தவறான முறையில் விளையாடி இருந்ததாக போட்டியாளர்கள் விமர்சித்திருந்தனர்.விக்ரமன் அசீம் வீட்டை விடடு வெளியேறினால் நல்லது என்று நேராகவே கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் அசீம் விளையாடியது குறித்து முன்னாள் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா கருத்துத் தெரிவித்துள்ளார். அதாவது அசீம் தனக்கு என்ன சரி என்று படுதோ அதைப் பண்ணுகிறார்.அவர் யாருக்கும் தொந்தரவு கொடுக்கல டாஸ்க்கை ஒழுங்கா பண்ணுகின்றார். அவர் டஃப்பான போட்டியாளர் என்பதால் ஹவுஸ்மேட் அவருக்கு எதிராக இருக்கிறாங்க.


ஆனால் இப்படியே போய்ட்டு இருந்தால் அசீமுக்கு மக்கள் ஆதவது அதிகமாகிடும் என்றும் அசீமுக்கு ஆதரவாகத் தெரிவித்துள்ார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement