• Jul 23 2025

ஹாலிவுட் நாயகியாக மாறிய வனிதா விஜயகுமார் - ஏய் எப்புர்ரா ஒரேயடியா இப்படி மாறிட்டீங்க!

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இதன் பின்னர் சில காலம் நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.


பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானார்.இதனையடுத்து சொந்தமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றார்.அதில் சமையல், அழகுக்கலை , உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 


மேலும் பல்வேறு திரைப்படத்திலும் பிஸியாக நடித்தி வரும் வனிதா, அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சொந்தமாக துணி கடை மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வருகிறார்.


ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிஸியாக இருக்கும் வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் ஹாலிவுட் கதாநாயகிக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் கிளி பச்சை நிற உடையில், ஹாலிவுட் நடிகை போல கலர் செய்த முடியுடன் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகள் ஏய் எப்புர்ரா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர், நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவுசெய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement