• Jul 26 2025

வலிமை படத்தில் முதலில் அம்மாவாக நடித்திருந்தது வாரிசு பட நடிகை தானா?- இதனால் தான் விலகினாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஹேண்ட்ஸம் என்றும் ஆணழகன் என்றும் காதல் மன்னன் என்றும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட வந்தவர் நடிகர் அஜித். அஜித்தின் அழகில் மயங்காத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்த அஜித் சமீப காலமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறினாலும் அதையும் புதிய ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டாக மாற்றி விட்டார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.


வரும் பிப்ரவரி மாதம் ஏகே 62 படத்தின் பூஜை போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், சாய் பல்லவி என ஹீரோயின்கள் லிஸ்ட் பெரிதாக போய்க் கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் அஜித்தின் ஏகே 62 படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் இவரது நடிப்பில் கமந்த ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் வலிமை. இப்படத்தில் முதலில் அஜித்தின் அம்மாவாக நடிக்க இருந்தது வாரிசு படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜெயசுதா தானாம்.படப்பிடிப்புக்கு முதல் நாள் சென்ற அவர் கொரோனா பாதிப்பின் காரணத்தினால் தானாம் அப்படத்திலிருந்து விலகினாராம்.அவருக்கு பதிலாக சுமித்ரா அஜித்தின் அம்மாவாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement