• Jul 24 2025

பெண்கள் விழிப்புணர்வு கதையில் கதாநாயகியாக அறிமுகமாகும் வீரப்பன் மகள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் 'மாவீரன் பிள்ளை'.இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.

படத்தில் நடிப்பது குறித்து விஜயலட்சுமி கூறியதாவது:-"சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர். 

சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

 இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்" என்று கூறினார்.

Advertisement

Advertisement