• Jul 24 2025

எதிர்நீச்சலில் அடுத்த ஆதிகுணசேகரனான வேல ராமமூர்த்திக்கு கொடுக்கவுள்ள ஒருநாள் சம்பளம் இவ்வளவா... வியப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்தவர் தான் நடிகர் மாரிமுத்து. அதில் அவரது எதார்த்தமான நடிப்பும், பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. அதன் காரணமாக அவர் சினிமாவில் அடைந்த பிரபலத்தைவிட சீரியல் மூலம் அதிகம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 


இவர் பேசும் வசனங்களை வைத்து சமூக வலைத்தளங்களிலும் பலரும் அவரை ட்ரெண்ட் ஆக்கினர். இந்தச் சூழலில் இவரின் இறப்பைத் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் இத்தனை நாளாக ஆதி குணசேகரன் கதாபாத்திரம் காலியாகவே இருந்து வந்தது.

அந்தவகையில் அடுத்த ஆதி குணசேகரனாக மாரிமுத்துவின் தம்பி, வேல ராமமூர்த்தி, ராதாரவி, பசுபதி எனப் பலரது பெயர்கள் அடிபட்டாலும் உண்மையில் யார் அடுத்த ஆதி குணசேகரனாக நடிக்கப்போகிறார் என்ற உறுதியான தகவல் யாருக்கும் தெரியாமல் இருந்தது.


இருப்பினும் சமீபத்தில் வெளியான ஒரு ப்ரோமோ மூலமாக அடுத்த ஆதி குணசேகரன் நடிகர் வேல ராமமூர்த்தி என்பது தெளிவாகியிருக்கின்றது. மேலும் ஆரம்பத்தில் இவர் குணசேகரனாக நடிக்க முடியாது என்று பல காரணங்களை சொல்லி வந்தவுடன், உடனே சீரியல் குழுமம் டபுள் மடங்கு சம்பளத்தை கொடுப்பதாக கூறியிருப்பதாகவும், அதனால் தான் உடனே ராமமூர்த்தியும் ஓகே சொல்லி இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

அந்தவகையில் இதுவரை ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்துவிற்கு ஒருநாளைக்கு 20 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து வேல ராமமூர்த்திக்கு அதன் இரண்டு மடங்காக 40ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement